மிகவும் எதிர்பார்த்துக் கிடந்த புத்தகக் கண்காட்சிக்கு திட்டமிட்டபடி
செல்லமுடியாமல் தாமதமாகி விட்டது... ஆனால் தவறவிடாமல் சென்று வந்ததில்
இப்பொழுதுதான் நிம்மதி... என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று
குறித்துவைத்த சில புத்தகங்கள் வாங்கினேன்... பல புத்தகங்கள் பொருளாதார சூழலால்
வாங்க இயலாமல் போய்விட்டது... போன வருட புத்தக கண்காட்சியில் வாங்கியதே இன்னும்
படித்து முடிக்கப்படாமல் செல்பில் தூங்குவதால் சரி இந்த முறையும் வாங்கி தூங்க
வைக்க வேண்டாம் என்பதாலும் லிஸ்டில் இருந்த சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.. இதோ
நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட் :
·
வாலி 1000 – கவிஞர் வாலி எழுதிய ஆயிரம் பாடல்களின் தொகுப்பு.. எல்லா
விதமாகவும் பாடல்கள் எழுதும் வாலியின் வாலிப வரிகளின் தொகுப்பு...
·
6174 – க.சுதாகர் எழுதிய முதல் புதினம்.. சமூகத் தள நண்பர்கள் பலர்
படித்து விட்டு பாரட்டிருந்த புத்தகம்.. அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து
கொள்ள வாங்கினேன்.. முதலில் படிக்க இருப்பதும் இதுவே தான்..
·
7.83 ஹெர்ட்ஸ் – க.சுதாகர் எழுதியிருக்கும் இரண்டாவது புதினம்.. இந்த
புத்தகம் பற்றி எதுவும் தெரியாது.. எனது லிஸ்டிலும் கிடையாது.. ஆனால் பார்த்ததும்
வாங்கிவிட்டேன்...
·
லிண்ட்சேலோகன் w/o மாரியப்பன் – வா.மணிகண்டன் எழுதிய மின்னல் கதைகள்..
வா.மணிகண்டனின் “நிசப்தம்” வலைதளத்தை வாசித்ததுண்டு.. பல பதிவுகள் ரசிக்கும் படி
இருக்கும்.. போன புத்தகக் கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்டேன்.. அதனால் இந்த
முறை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்து வாங்கிவிட்டேன்..
·
மிளிர்கல் – ரா.முருகவேள் எழுதியிருக்கும் புதினம்.. “எரியும்
பனிக்காடு” என்ற இவரின் மொழிபெயர்ப்பு நாவலை வாசித்திருக்கிறேன்.. ஆனந்த விகடனில்
விருது பெற்றிருந்த நாவல் என்பதால் பார்த்ததும் வாங்கிவிட்டேன்..
·
ஆறாம் திணை – கு.சிவராமன்.. ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன்
எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
·
இன்னொருவனின் கனவு – குமரகுருபரன்
·
மர்மயோகி நாஸ்டிராமஸ் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
எப்படியாவது இந்த புத்தகக் கண்காட்சியில்
வாங்கிய புத்தகங்களையும் போன முறை வாங்கிய புத்தகங்களையும் அடுத்த புத்தகக்
கண்காட்சி வருவதற்குள் வாசித்து விடவேண்டும்.. பார்ப்போம்...
Comments
Post a Comment